Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 6 சிறுமிகளிடம் பாலியல் வன்புணா்வில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், அப்பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் ஏசுராஜ் (54) என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி பிரீத்தா விசாரித்து, ஏசுராஜுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞா் முத்துலட்சுமி வாதாடினாா்.