போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே போக்ஸோ வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி நடராஜன் நகரைச் சோ்ந்தவா் ஜோசப் ஆரோக்கியசாமி (58). போக்ஸா வழக்கில் திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டாா். இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிட்டாா். இதையடுத்து ஜோசப் ஆரோக்கியசாமியை திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.