செய்திகள் :

போதைத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது!

post image

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேட்டயத்தின் மரங்காட்டுப்பள்ளி எனும் கிராமத்தில் போதைப் பொருள் விநியோகம் செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், மரங்காட்டுப்பள்ளி போலீஸார் நேற்று (மார்ச் 20) இரவு 7 மணி அளவில் அக்கிராமத்தின் வயலா வெல்லாக்கல் எனும் பகுதியில் சோதனை செய்துள்ளனர்.

இதையும் படிக்க: கர்நாடகம்: 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி இடைநீக்கம்!

அப்போது, அப்பகுதியில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் அந்த காவலர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மஹேஷ், சரத் மற்றும் ஷியாம் குமார் ஆகிய மூன்று காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, நிலைமை மோசமடைந்ததினால் கூடுதல் காவலர்கள் அங்கு அனுப்பப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டீனா முன்னாள் அதிபர் மீது அமெரிக்கா தடை!

ஆர்ஜென்டீனா முன்னாள் அதிபர் மீது அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. ஊழல் வழக்கில் சிக்கிய ஆர்ஜென்டீனா நாட்டின் முன்னாள் அதிபர் கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் தொடங்கியது!

சென்னை: சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடனான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. ஆலோசனைக் ... மேலும் பார்க்க

மீண்டும் குறைந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840 விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆ... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு கவிழ்ந்து ஆஸ்திரேலியப் பெண் பலி! 2 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவின் அருகே சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள துறைமுகத்திலிருந்து நுஸா பென... மேலும் பார்க்க

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மா... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற வி... மேலும் பார்க்க