செய்திகள் :

போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!

post image

குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கங்களுடன் மெக்சிகோ தொடர்பில் இருப்பதாகக் கூறிய வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டை அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

வட அமெரிக்காவின் மூன்று முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் மெக்சிகோ, கனடா இடையே வணிக உறவில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி விதிப்பு இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கத்துடன் மெக்சிகோ அரசு, தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா முன்வைத்த அவதூறையும் உள்விவகாரங்களில் தலையிடுவதையும் திட்டவட்டமாக எதிர்க்கிறோம் என அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.

ஃபென்டாலின் என்ற வலிநிவாரணி புழக்கம் மற்றும் அமெரிக்க - மெக்சிகோ உறவு குறித்து பதிவிட்டுள்ள அவர்,

''அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தையையே மெக்சிகோ விரும்புகிறது. மாறாக அடிபணிதலையும் மோதல் போக்கையும் அல்ல.

அமெரிக்க அரசு மற்றும் அதன் ஏஜென்சிகள், தனது நாட்டு மக்களிடையே ஃபென்டாலின் புழக்கத்தை தடுக்க விரும்பினால், அதன் முக்கிய நகரங்களின் வீதிகளில் விற்கப்படும் போதைப் பொருள்களைத் தடுக்க வேண்டும். இதனை அவர்கள் செய்யவில்லை. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படும் முறைகேடான பணம் நாட்டு மக்களை கடுமையாக பாதிக்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஃபென்டாலின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மெக்சிகோ அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மேற்கோள் காட்டியுள்ள அவர், ''கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து 20 மில்லியன் டோஸ் ஃபென்டாலின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 10 ஆயிரம் பேரை கைது செய்துள்ளது'' என கிளாடியா ஷீன்பாம் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!

கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!

மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீ... மேலும் பார்க்க

பாக்.: மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

வாஷிங்டன் விமான விபத்து: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் விமானத்துடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கபட்டது. ஏற்கெனவே, ஹெலிகாப்டா் மோதியதால் பொடோமே... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் பரிந்துரையை நிராகரித்தன அரபு நாடுகள்

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையை அரபு நாடுகளின்... மேலும் பார்க்க

இலங்கை: வாகன இறக்குமதி தடை நீக்கம்

வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு சனிக்கிழமை முழுமையாக நீக்கியது. இது தொடா்பான அதிபா் அனுர குமார திசநாயக்கவின் அறிவிப்பு அரசிதழில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

உக்ரைன் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி

உக்ரைன் மீது ரஷிய நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்... மேலும் பார்க்க