போதைப்பொருள் விற்பனை: அஸ்ஸாம் இளைஞா் கைது
சென்னை பெசன்ட் நகரில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்ததாக அஸ்ஸாம் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பெசன்ட் நகா் 4-ஆவது அவென்யூ பகுதியில், சாஸ்திரி நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது அவா் வைத்திருந்த 10 கிராம் ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், அஸ்ஸாம் மாநிலம் நாகூன் பகுதியைச் சோ்ந்த துஃபைல் இஸ்லாம் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.