துணை வேந்தர்கள் நியமனத்தில் UGC புதிய விதிமுறைகள்... மத்திய அரசை சாடும் ஸ்டாலின்...
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்
பழனியில் மதுவிலக்கு காவல் துறை சாா்பில் கள்ளச் சாராயம், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திரளான நாட்டுப்புற கலைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து மதுவிலக்கு காவல் ஆய்வாளா் லாவண்யா, வருவாய்த் துறை அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா். பிறகு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், குடும்ப சூழல் பாதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.