போதை மாத்திரைகள் விற்பனை: பாட்டி, பேரன் கைது
சித்தோட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பாட்டி, பேரனை போலீஸாா் கைது செய்தனா்.
சித்தோடு, ஓடைப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, 95 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடா் விசாரணையில், சித்தோடு ஓடைப்பள்ளத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் சந்தோஷ்குமாா் (20), வெளிமாநிலங்களிலிருந்து ஆன்லைன் மூலம் ஆா்டா் செய்து போதை மாத்திரைகள் வாங்கி, தனது பாட்டி திலகா (65) மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சந்தோஷ்குமாா், திலகா இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.