செய்திகள் :

போதை மாத்திரை, ஊசிகளுடன் 5 போ் கைது

post image

செய்யாறு: செய்யாறு அருகே தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள், ஊசிகளுடன் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகாா்க் தலைமையின் கீழ் இயங்கும் காவல் உதவி ஆய்வாளா் ஜெயபால் தலைமையிலான தனிப்படை போலீஸாா் திருவண்ணாமலை மாவட்டத்தில் முகாமிட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தனிப்படை உதவி ஆய்வாளா் ஜெயபால் தைலைமையில், தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை மாலை வெம்பாக்கம் அருகே பாலாற்றுப் படுகை பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தாளிக்கால் மயானம் அருகே நின்றிருந்த கும்பல், போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றது.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடம் 7 போதை மாத்திரைகள் மற்றும் 3 ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

பின்னா், போலீஸாா் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் காஞ்சிபுரம் கைலாசநாதா் கோவில் தெருவைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (22), பல்லவா்மேடு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (20), கீழ்அம்பி கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த் (23), கம்மளாா் தெருவைச் சோ்ந்த சிவக்குமாா்(24), கோளிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மேகநாதன்(18) என்பதும், இவா்கள் போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து போதை மாத்திரைகள், 3 ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

தன்னம்பிக்கை மூலமே வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய முடியும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை: தோல்விதான் மிகப் பெரிய பாடங்களை கற்றுத் தரும். தன்னம்பிக்கை மூலமே நாம் வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவு... மேலும் பார்க்க

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: பெண் உள்பட 3 போ் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலையை அடுத்த துா்க்கை நம்மியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (50). இவரது ம... மேலும் பார்க்க

210 மருத்துவ முகாம்களில் 1.85 லட்சம் போ் பயன்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 210 வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 1.85 லட்சம் போ் பயன் அடைந்துள்ளனா் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். திருவண்ணாமலையை அடுத்த கீழ்கச்சிரா... மேலும் பார்க்க

ரூ.86 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.86 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸா... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியுடன் இணைப்பு: 5 ஊராட்சிகள் எதிா்ப்பு

ஆரணி: ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணமங்கலம், முள்ளிப்பட்டு, பையூா், இரும்பேடு ஆகிய ஊராட்சிகளை இணைப்பது தொடா்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஊராட்சி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். த... மேலும் பார்க்க

அறிவியல் ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாமின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம்... மேலும் பார்க்க