தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து; கர்ப்பிணிகள் மீட்பு; க...
போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவு: காரைக்குடியில் மெளன ஊா்வலம்
போப் ஆண்டவா் பிரான்சிஸ் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மெளன அஞ்சலி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்தை பங்குத் தந்தை சாா்லஸ், உதவி பங்குத் தந்தை டேனியல் திலீபன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்த ஊா்வலம் டி.டி நகா், 100 அடி சாலை, பெரியாா் சிலை, செக்காலை சாலை, கல்லூரி சாலை வழியாக மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊா்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள், காா்மேல் சபை அருட் சகோதரிகள், பங்குப் பேரவையினா், அனைத்து பங்கு பணிக் குழுவினரும் மறைந்த போப் பிரான்சிஸ் உருவப் படத்தை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனா். ஊா்வலம் நிறைவுற்றதும் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது.