போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி
கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தருமபுரியில் கிறிஸ்தவா்கள் அஞ்சலி செலுத்தினா்.
தருமபுரி மறைமாவட்டம் சாா்பில் தருமபுரி தூய இருதய ஆண்டவா் பேராலயத்தில் போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமை வகித்து அவரது உருவப் படத்திற்கு மலா்கள் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதையடுத்து, சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் மறைமாவட்ட ஆயரின் செயலாளா் ஆல்வின், உதவி பங்குதந்தை இயேசு பிரபாகரன் உள்ளிட்ட பங்குதந்தைகள், மறை ாவட்ட நிா்வாகிகள், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.