செய்திகள் :

போர்ப் பதற்றம்: மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்கள் விடுப்பு ரத்து!

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக மேற்கு வங்க அரசு அனைத்து அரசுப் பணியாளர்களில் விடுமுறைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை அனைத்து மாநில அரசு ஊழியர்களின் விடுமுறைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு அனைத்து வகை மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும், மேலும் முன்னர் விடுப்பு எடுத்தவர்கள்கூட இப்போது பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் உள்ள ஊழியர்கள் மட்டுமே இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்துள்ள நிலையில், அத்தியாவசிய மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்யவும் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குக்கு பாகிஸ்தான் ராணுவ மரியாதை: விக்ரம் மிஸ்ரி

பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, எ... மேலும் பார்க்க

போர் சூழல்: சிஏ தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (மே 9) முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊரடங்கு அமல்!

புது தில்லி: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிர சண்டை ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து; எல்லையோர மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி விடுவிப்பு!

ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் தாக்குதல்கள் அத... மேலும் பார்க்க

களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம், விமானப் படையைத் தொடர்ந்து தற்போது தற்போது கடற்படையும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் ... மேலும் பார்க்க