கந்து வட்டி கொடுமை! விஜய்க்கு தவெக உறுப்பினர் தற்கொலை வாக்குமூலம்!
போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்த விமானப் பயணி கைது
போலி ஆவணங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சிக்கு வந்த விமானப் பயணியை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா், மல்லாங்கிணறு சாலை தங்கமணி காலனியைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி (62). இவா், இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு கடந்த திங்கள்கிழமை மாலை வந்தாா்.
அப்போது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அவரது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்தனா். இதில், அவா் போலி ஆவணங்கள் மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரைக் கைது செய்த போலீஸாா் பின்னா் பிணையில் விடுவித்தனா்.