TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 01.07.2025 முதல் இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னா் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள், 01.07.2025 முதல் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதேபோன்று, மலையிடப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ஸ்ரீல்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையத்திலேயே 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம்.
கூடுதல், விவரங்களுக்கு இணை இயக்குநா் (மு.கூ.பொ), உதவி இயக்குநா், மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம், காஜாமலை மெயின் ரோடு, காஜாமலை, திருச்சி - 620 023 என்ற முகவரியிலும், 0431-2420838 என்ற தொலைபேசி
எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.