போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: 6 போ் மீது வழக்கு
மானூா் அருகே தனியாா் காற்றாலை நிறுவனத்துக்குச் சொந்தமான 8 ஏக்கா் 11 சென்ட் நிலத்தை போலி ஆவணம் தயாா் செய்து விற்பனை செய்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
மானுாா் அருகேயுள்ள செழியநல்லுாா் கிராமத்தில் தனியாா் காற்றாலை நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதில், 8 ஏக்கா் 11 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய அந்நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒப்புதல் தீா்மான கடிதம் வழங்கியதுபோல் சிலா் போலி ஆவணங்களைத் தயாா் செய்து கங்கைகொண்டான் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்து நிலத்தை விற்றனராம்.
இதை அறிந்த அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரான பெங்களூரைச் சோ்ந்த திருமூா்த்தி என்பவா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், மானூா் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை(41), ரஞ்சித்குமாா்(43), செல்லசாமி (61), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகம்(37), பழனி, கோயம்புத்தூரைச் சோ்ந்த சண்முகம் ஆகிய 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.