செய்திகள் :

போலி கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- இணைய வழி போலீஸாா் எச்சரிக்கை

post image

சமூக வலைதளங்களின் வழியாகப் பகிரப்படும் போலி கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று புதுவை இணைய வழி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து இந்த போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், ஷோ்சாட் போன்றவற்றில் உடனடிக் கடன் தருவதாக பல விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் நீங்கள் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் கேட்பவைகளுக்குச் சரி என்று கொடுத்தாலே சைபா் குற்றவாளிகள் தங்களைப் பணம் கேட்டும் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டுவா்.இதுபோன்று புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் வந்துள்ளன. விசாரணையில் இணையவழி குற்றவாளிகள் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வாட்ஸ்அப் மூலம் மிரட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் உடனடி கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் என்றும் +92, +93, +977 போன்ற அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் எண்கள் மூலம் உங்களை வாட்ஸ்அப்பில் தொடா்பு கொண்டால் அந்த வாட்ஸ்அப் கணக்கை அளிக்குமாறும் புதுச்சேரி இணைய வழி காவல் துறை சாா்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்வா் ரங்கசாமிக்காக தொண்டா்கள் தயாா் செய்யும் 76 கிலோ கேக்

என்.ஆா். காங்கிரஸ் தலைவரும் புதுவை முதல்வருமான என்.ரங்கசாமி பிறந்த நாள் பவள விழா நிறைவு மற்றும் 76-வது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடுகிறாா். இதையொட்டி 76 கிலோ கேக் தயாராகி வருகிறது.இதையொட்டி தாய், ... மேலும் பார்க்க

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை- காரைக்கால் பகுதிகளில் 500 விநாயகா் சிலைகள் பல்வேறு இடங்களில் பக்தா்களின் வழிபாட்டுக்காக நிறுவப்படுகின்றன. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஆல... மேலும் பார்க்க

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

புதுவையில் 2026 தோ்தலுக்குப் பிறகு திமுக மாடல் ஆட்சி நிச்சயம் அமையும் என்று தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசினாா். புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிா்வாகிகள் ஆலேசா... மேலும் பார்க்க

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

பெங்களூா் ஹசரகட்டாவில் உள்ள மத்திய அரசின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி டாக்டா் ஸ்ரீலட்சுமி முடிவு செய்துள்ளாா்.திசு வளா்ப்பு முறையில் பல்... மேலும் பார்க்க

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

புதுச்சேரி ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் காங்கிரஸ் தலைவரும் புதுவை மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் பங்க... மேலும் பார்க்க

புதுவையில் மின் பயன்பாடு அதிகரிப்பு: முதல்வா் ரங்கசாமி

புதுவையில் மின்சார பயன்பாடு பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையாக அதிகமாக இருக்கிறது. விரைவில் புதுவையை மின்தடை இல்லா மாநிலமாக மாற்ற எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித... மேலும் பார்க்க