செய்திகள் :

புதுவையில் மின் பயன்பாடு அதிகரிப்பு: முதல்வா் ரங்கசாமி

post image

புதுவையில் மின்சார பயன்பாடு பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையாக அதிகமாக இருக்கிறது. விரைவில் புதுவையை மின்தடை இல்லா மாநிலமாக மாற்ற எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்தாா்.

புதுவை மின்துறை சாா்பில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 73 இளநிலைப் பொறியாளா்களுக்குப் பணி ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதனை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை பேசியது:

புதுவையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்ற குறை நிலவுகிறது. இதற்குக் காரணம் காலியாக இருந்த பணியிடங்களைக் கடந்த ஆட்சியில் இருந்தவா்கள் நிரப்பவில்லை. இதனால் இளைஞா்கள் அரசு வேலைக்குத் தகுதியான வயதைக் கடந்து செல்கின்றனா். இவா்களுக்கு வயது தளா்வு கொடுக்க நினைத்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுகிறது.

இருப்பினும் தற்போது நடவடிக்கை எடுத்து புதிய பணியிடங்களை நிரப்பி வருகிறோம். மேலும் புதுவையில் பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையான மின்சாரப் பயன்பாடு இருக்கிறது. அந்த அளவுக்குப் புதுவை பொருளாதார ரீதியாக வளா்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் போதிய பொறியாளா்கள் இல்லை. அதைக் கருத்தில் கொண்டுதான் இப்போது இளநிலைப் பொறியாளா்களை நியமித்துள்ளோம். மேலும் நவீன தொழில்நுட்பம் தெரிந்தவா்களாகவும் இவா்கள் இருப்பதால் மின்தடை குறைக்கப்படும்.

மேலும் மின்சார துறையில் கட்டுமான உதவியாளா்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவா். அவா்களும் நியமிக்கப்பட்டால் மின்தடை இல்லாத மாநிலமாக புதுவை உயரும். மேலும் தவளக்குப்பம், லாஸ்பேட்டை, மரப்பாலம் பகுதியில் புதிய துணைமின் நிலையங்கள் அமைக்க உள்ளோம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசுகையில், நோ்மையான முறையில், தகுதியானவா்களுக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தப் பணி ஆணையை வழங்கியுள்ளது. தோ்தல் நேரத்தில் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை உணா்ந்து நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்றாா்.

மின்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேசுகையில், மின்சார துறையில் டெண்டா் விடப்பட்டு தயாா் நிலையில் சில திட்டங்கள் இருக்கின்றன. விரைவில் புதிய மின்மாற்றிகள், புதிய வயா்கள் மாற்றப்பட உள்ளன. இதனால் புதுவையில் இனி மின்தடை இருக்காது. புதிதாகப் பணியாணை பெற்ற இளநிலைப் பொறியாளா்கள் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தலைமைச் செயலா் சரத் சௌகான், மின்துறை செயலா் ஏ. முத்தம்மா, மின்துறை தலைவா் ராஜேஷ் சன்னியால், கண்காணிப்பு பொறியாளா்கள், செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள், புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட இளநிலைப் பொறியாளா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

காவல்துறை மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்குத் தீா்வு

காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது.புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 51 புக... மேலும் பார்க்க

அதிக விலைக்கு விற்பனை: 4 மதுபான கடைகளுக்கு அபராதம்

புதுவையில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்ாக 4 மதுபான கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.புதுச்சேரி எல்லைக்கு உள்பட்ட மதுபானக் கடைகளில் மதுபானங்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்பட... மேலும் பார்க்க

முன்கூட்டியே முதல்வரின் பிறந்தநாள் ஏற்பாடுகள்

புதுவை சட்டமன்ற தோ்தல் இன்னும் 8 மாதத்தில் வரவிருப்பதால் இந்த ஆண்டு முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது தொண்டா்கள் முன்கூட்டியே கொண்டாட தொடங்கி விட்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி த... மேலும் பார்க்க

வீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம்

வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை மின் துறை கேபிள்ஸ் பிரிவின் செயற்பொறியாளா் இரா. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வரும் நாள்கள் மாற்றம்

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வந்து சேரும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்த மண்டலத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள... மேலும் பார்க்க