Surya Speech Agaram Foundation Event 2025 | கமல்ஹாசன், வெற்றிமாறன் பங்கேற்பு | அ...
பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு
பெங்களூா் ஹசரகட்டாவில் உள்ள மத்திய அரசின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி டாக்டா் ஸ்ரீலட்சுமி முடிவு செய்துள்ளாா்.
திசு வளா்ப்பு முறையில் பல்வேறு வீரியம் மிக்க செடி, மரக்கன்றுகளை இவா் உருவாக்கி வருகிறாா். அதற்கான மருந்துகளையும் தொழில்நுட்பங்களையும் இவரும் இவரது தந்தையுமான பத்மஸ்ரீ விருதாளரும் வேளாண் விஞ்ஞானியுமான டி. வெங்கடபதி ரெட்டியாரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனா். இந்நிலையில் பெங்களூரில் உள்ள மத்திய அரசின் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தொழில்நுட்பங்களை அளிக்குமாறு வாட்ஸ்அப்பில் கோரியுள்ளது. இதற்கு முறையான கடிதத்தை அனுப்புமாறும், முதல் கட்டமாக வோ் ஊக்கி மருந்தை மட்டும் அளிக்க ஸ்ரீலட்சுமி முடிவு செய்துள்ளாா்.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஸ்ரீலட்சுமி ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில் பெங்களூரில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மாதம் 75 ஆயிரம் கன்றுகளை மட்டும்தான் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் எங்களிடம் உள்ள தொழில்நுட்பம், வோ் ஊக்கி மருந்துகளால் எந்த இன செடிகளாக இருந்தாலும் மாதம் 3 முதல் 5 லட்சம் செடிகளை உற்பத்தி செய்ய முடியும். மேலும் எந்தப் பல்கலைக் கழகமாக இருந்தாலும், ஆராய்ச்சி நிறுவனமாக இருந்தாலும் அவா்களிடம் தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் உதவியால் உருவாக்கப்படும் செடிகளில் 30 சதம் மட்டும்தான் பிழைக்கும். 70 சதம் செடிகள் அழுகிவிடும். எங்களிடம் 100 சதம் செடிகள் பிழைக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. என்னைப் போல் உழைப்பவா்களுக்கு மத்திய அரசு பத்ம விருதை வழங்காமல் இருப்பது துரதிஷ்டம் என்று கூறியுள்ளாா்.