செய்திகள் :

போலி பில் தயாரித்து மோசடி: நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சத்தை கையாடல் செய்த பெண் உதவியாளர் கைது!

post image

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பு மட்டுமல்லாது படத்தயாரிப்பு கம்பெனியும் வைத்திருக்கிறார். எடர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ஆலியா பட் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவரை தனது உதவியாளராக வைத்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டில் இருந்து 2024ம் ஆண்டு வரை வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் உதவியாளராக இருந்தார். அந்நேரத்தில் ஆலியா பட்டின் நிதி நிர்வாகம், படப்பிடிப்பு விபரம், பணம் வாங்குவது போன்ற வேலைகளை வேதிகா கவனித்து வந்தார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து செலவு, மீட்டிங் செலவு என பல்வேறு காரணங்களை கூறி போலி பில் தயாரித்து ஆலியா பட்டிடம் கையெழுத்து வாங்கி வேதிகா பணத்தை தனது தோழியின் வங்கிக்கணக்கிற்கு மாற்றினார். அதன் பிறகு அப்பணத்தை அங்கிருந்து தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டார். இது போன்று 2022-24ம் ஆண்டு வரை போலி பில் தயாரித்து 76.9 லட்சத்தை வேதிகா அபகரித்துக்கொண்டார்.

இந்த மோசடியை ஆலியா பட் தாயார் சோனி ரஸ்தான் சமீபத்தில் கண்டுபிடித்தார். வேதிகா தயாரித்து கையெழுத்து வாங்கிய பில்கள் அனைத்தும் ஒரிஜினல் போன்று இருந்தது. இது குறித்து சோனி ரஸ்தான் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து வேதிகாவை தேடி வந்தனர். போலீஸார் தேடுவதை அறிந்து கொண்டு வேதிகா தப்பிச்சென்றார். அவர் தொடர்ந்து இடத்தை மாற்றிகொண்டே இருந்தார். முதலில் மும்பையில் இருந்து ராஜஸ்தானுக்கு தப்பிச்சென்றார். அதன் பிறகு அங்கிருந்து கர்நாடகாவிற்கு தப்பிச்சென்றார்.

பின்னர் அங்கிருந்து புனேவிற்கும் பின்னர் பெங்களூருக்கும் சென்றார். இதையடுத்து பெங்களூரு சென்ற மும்பை போலீஸார் அவரை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். ஆலியாபட் நடிகர் ஷாருக் கானுடன் சேர்ந்து கொண்டு டார்லிங் என்ற படத்தை தயாரித்தார். தற்போது தனது கணவர் ரன்பீர் கபூருடன் சேர்ந்து லவ் அண்ட் வார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

"படிப்பு சரியாக வரவில்லை" - சாணி பவுடரைச் சாப்பிட்டு தனியார்ப் பள்ளி மாணவர் தற்கொலை; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், ஈசநத்தம் கஸ்பா தெருவைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மகன் யுவன் பிரியன் (வயது 17). இவர், அரவக்குறிச்சி அருகே உள்ள தனியார்ப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.இவர் தனது தாய் ரா... மேலும் பார்க்க

திருப்பூர் : குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் - சிக்கிய ஊராட்சி செயலாளர்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் மகேஷ் பிரபு(44). இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற எல்லப்பாளையம்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திரு... மேலும் பார்க்க

திருச்சி : தலைக்கேறிய மது போதை; பள்ளியில் விழுந்து கிடந்த ஆசிரியர் - சஸ்பெண்ட் செய்த அதிகாரி!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வையமலை பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 20 மாணவ - மாணவிகள் படித்து வரும் நிலையில், ஆவாரம்பட... மேலும் பார்க்க

சைக்கிளில் தாயத்து விற்ற பாபா வங்கிக்கணக்கில் ரூ.106 கோடி - மதமாற்றத்துக்காக வந்த பணமா?

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் மதமாற்றத்தில் ஈடுபட்ட ஜமாலுதின் என்ற சாங்கூர் பாபாவின் செயல்பாடுகளை மாநில தீவிரவாத தடுப்புப்படை தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் லக்னோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்; 42 வீடுகள் தரைமட்டம் - திருப்பூரில் அதிர்ச்சி!

திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயாதேவி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், வடமாநிலத் தொழிலாளர்க... மேலும் பார்க்க

ஆணவ (தற்)கொலை... அழுந்திக் கிடக்கிற ஆணவங்களை தலைதூக்க செய்யுமே..!

மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நாமக்கல் தம்பதியின் செய்தியை வாசிக்கையில், இரண்டு வகையில் மனம் கனத்துக்கொண்டிருக்கிறது. முதலாவதாக, இழந்துவிட... மேலும் பார்க்க