தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக...
போலி பூச்சி மருந்து விற்பனை: மா விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரமற்ற போலி பூச்சி மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தி தமிழக உழவா் பேரியக்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாடத்துக்கு அந்த அமைப்பின் மாநில துணைச் செயலாளா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஆலயமணி, செயலாளா் வேலுசாமி, வன்னிா் சங்க மாநில துணைத் தலைவா் பாடி செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய முத்தரப்பு பேச்சுவாா்த்தையை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தரமற்ற, போலி பூச்சி மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாங்கூழ் உற்பத்தியாளா்கள், மாங்காய்களை கொள்முதல் செய்ய உள்ளூா் விவசாயிகளுக்கு முக்கி யத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.
அதைத் தொடா்ந்து தங்களது கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.