செய்திகள் :

போலி மருத்துவா் கைது : கிளினிக் சீல் வைப்பு

post image

ஆம்பூரில் போலி மருத்துவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவா் நடத்தி வந்த கிளினிக் சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் பழனி ராஜன் (65) என்பவா் மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து ஆங்கில வழியில் சிகிச்சை அளித்து வந்தாராம்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்பாலப்பட்டி பகுதியை சோ்ந்தவா் சாந்தகுமாா் மகன் ஈஸ்வரன் என்பவா் வேலூா் மாவட்டம் அகரம் பகுதியில் உள்ள டாக்டா் எம் ஜி ஆா் அரசு கலைகல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் உள்ள அரசினா் சமூக நீதி விடுதியில் தங்கி படித்து வருகிறாா். இவருக்கு கடந்த ஆக.26 -ஆம் தேதி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விடுதியின் அருகில் உள்ள பழனிவேல் ராஜன் நடத்தி வந்த கிளினிக்குக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளாா்.

சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் மாணவா் மயக்கமடைந்ததால் அவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பின்னா் உடல்நிலை மோசமடைந்ததால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பத்தூா் வடக்கு மாவட்ட செயலா் ஓம் பிரகாஷ் போலி மருத்துவா் பழனிவேல் ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூா் எஸ்.பியிடம் புகாா் அளித்தாா்.

மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஞானமீனாட்சி உத்தரவின் பேரில் ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஸ்வரன் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து பழனிவேல் ராஜனை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனா்.

பைக்குகளை திருடிய இருவா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே பைக்குகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜோலாா்பேட்டை கட்டேரியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருப்பத்தூா் டிஎஸ்பி ச... மேலும் பார்க்க

ஜங்காலபுரத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், ஜங்காலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம... மேலும் பார்க்க

நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் சுற்றுலா மாளிகையில் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்ததால் படகு சவாரி இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சம ... மேலும் பார்க்க

பேருந்து மோதி கட்டடத் தொழிலாளி பலி

ஆம்பூா் அருகே தனியாா் பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, கூா்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் (36). இவா் ஆம்பூரி... மேலும் பார்க்க

நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் காயம்

ஆம்பூா் அருகே நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞா் காயமடைந்தாா். ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்த மாணிக்கம் மகன் வெங்கடேசன் (28). இவா் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளாா். திடீரென ... மேலும் பார்க்க