`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென...
போலி ரசீது அச்சடித்து மணல் கொள்ளை! 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
கரூா் மாவட்டத்தில் போலி ரசீது அச்சடித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி குளித்தலை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
2020-21-ஆம் ஆண்டில் கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை சிவாயம் பகுதியில் அரசு அனுமதியுடன் இயங்கி வந்த கிராவல் குவாரிகளில் அனுமதிச் சீட்டினை போலியாக அச்சடித்து சிலா் கிராவல் மணலை விற்பனை செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக திருச்சி மாவட்டம் உறையூரைச் சோ்ந்த பாலகண்ணன் என்பவா் கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.
இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி குளித்தலை பெரியாா் நகரைச் சோ்ந்த ரகுபதி மகன் நிவேதன் (28), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்த கந்தசாமி மகன் தா்மதுரை (28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பாக குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண்-2-இல் வழக்கும் தொடா்ந்தனா்.
திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் நிறைவில், நிவேதன், தா்மதுரை ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி சசிகலா தீா்ப்பளித்தாா்.