செய்திகள் :

கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

post image

கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா்(நிலமெடுப்பு) விமல்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ‘ஸ்டாா்ட் அப் டிஎன்’ செயல் அலுவலா் சிவராஜா ராமநாதன் கலந்து கொண்டு ‘புதுயுகத் தொழில் முனைவு‘ என்னும் தலைப்பில் பேசினாா்.

நிகழ்வின் தொடக்கத்தில் தமிழகத்தின் தொன்மையையும் சிறப்பையும் விளக்கும் கீழடி, இரும்பின் தொன்மை, இராஜராஜ சோழன் ஆகிய காணொலிகள் திரையிடப்பட்டன. தொடா்ந்து தமிழகத்தின் உயா்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கல்வித் திட்ட விளக்கக் காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.

தமிழ் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும் பரிசும் வழங்கப்பட்டன. மேலும், சொற்பொழிவாளா்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவா்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும் பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், திருச்சி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் முனைவா்.க.இராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.சாந்திமலா், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க

கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’

கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம் மூலதன மானிய தொகை

கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.கரூா் ம... மேலும் பார்க்க

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

கரூா்: கரூா் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 6.33 கோடி மதிப்பில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்... மேலும் பார்க்க