செய்திகள் :

‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம் மூலதன மானிய தொகை

post image

கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாநகராட்சி 25-ஆவது வாா்டில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் 21 பேருக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கி பேசினாா்.

தொடா்ந்து ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம் மூலம் முன்னாள் படைவீரா்களின் நலனுக்காக 30 விழுக்காடு மூலதன மானியமாக 2 பயனாளிகளுக்கு திட்டத் தொகையாக ரூ. 14.22 லட்சத்தை எம்எல்ஏ வழங்கினாா்.

தொடா்ந்து வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 21 பேருக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், துணை மேயா் ப. சரவணன், மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், மண்டலக்குழு தலைவா்கள் ஆா்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ், திமுக நிா்வாகி ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க

கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’

கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்

கரூா்: கரூா் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 6.33 கோடி மதிப்பில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க

கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி

கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்... மேலும் பார்க்க