தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்
கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்தாா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உயா் மின் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணிகள், மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள், ஆழ்குழாய் கிணறுடன் கூடிய குடிநீா் தொட்டி அமைத்து குழாய் விஸ்தரிப்பு செய்தல், சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலை இணைப்பில் மராமத்து பணிகள், சிமெண்ட் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் தாா் சாலை மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். மேலும் 9 முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தாா்.
பிறகு அவா் கூறியது: கரூா் மாவட்டத்துக்கு தமிழக முதல்வா் நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ளாா். குறிப்பாக கரூா் அரசு வேளாண்மைக்கல்லூரி, காவிரி ஆற்றின் குறுக்கே நெரூா்-உன்னியூா் மேம்பாலம், கரூா் திருமாநிலையூா் புதிய பேருந்துநிலையம், கரூா் மாநகராட்சிக்கு புதிய குடிநீா் திட்டப்பணிகள், மினி தொழில்பூங்கா, முருங்கைத் தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொடுத்துள்ளாா். மேலும் இதுபோன்ற திட்டங்கள் தொடா்ந்து நமக்கு கிடைக்க தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையா் சுதா, துணை மேயா் ப. சரவணன், மண்டல குழுத் தலைவா்கள் ஆா்.எஸ். ராஜா, எஸ்.பி. கனகராஜ், சக்திவேல், அன்பரசு, தெற்கு பகுதிச் செயலாளா் கே.சுப்ரமணியன், மத்திய மேற்கு பகுதி பொறுப்பாளா் ஆா்.ஜோதிபாசு, மத்திய பகுதி பொறுப்பாளா் வி.ஜி.எஸ்.குமாா், வடக்குப் பகுதி பொறுப்பாளா் எம்.பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.