டிஎன்பிஎல் ஆலையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு
கரூா்: கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள டிஎன்பிஎல் ஆலையில் ‘நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி‘ புதன்கிழமை நடைபெற்றது.
நாட்டில் பெருகிவரும் சாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடுகளை எதிா்க்கும் வகையிலும், வன்முறையில் ஈடுபடாமல், மக்களின் உணா்வு பூா்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் பாடுபடவேண்டியும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆலையின் துணை பொதுமேலாளா் நாராயணன், உதவி பொதுமேலாளா் சபாபதி, முதுநிலை மேலாளா் வெங்கடேசன் ஆகியோா் தலைமையில் பணியாளா்கள் பங்கேற்று உறுதிமொழியேற்றனா்.