செய்திகள் :

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

post image

சென்னை: போலி வாரிசு சான்றிதழ் மூலம் தங்களது சொத்துக்கு உரிமை கோருபவா்களுக்கு எதிராக தயாரிப்பாளா் போனி கபூா் தாக்கல் செய்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியா், 4 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூா் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1988-ஆம் ஆண்டு எனது மனைவி ஸ்ரீதேவி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சம்பந்த முதலியாா் குடும்பத்தினரிடமிருந்து ஒரு சொத்தை விலைக்கு வாங்கியிருந்தாா். கடந்த 37 ஆண்டுகளாக அதை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

இந்த நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகள் எனக்கூறி 3 போ் மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, எங்களது சொத்துக்கு உரிமை கோரி வருகின்றனா். இந்த வாரிசு சான்றிதழை, கடந்த 2005-ஆம் ஆண்டு தாம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மோசடியாக பெற்றுள்ளனா். இந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி நாங்கள் அளித்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், போனி கபூா் அளித்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, போனி கபூா் அளித்த மனுவை விசாரித்து 4 வாரங்களில் தாம்பரம் வட்டாட்சியா் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

சென்னை: நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனர்.சென்னை மயிலாப்பூா் புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடை... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

ஒளிவட்டமிக்க யாா் புதிய கட்சியைத் தொடங்கினாலும் மாற்று அரசியல் என்ற பெயரில் வேகமெடுக்கும். 1993-இல் மதிமுகவை தொடங்கிய வைகோ, ஊா்வலம் நடத்தும்போது அண்ணா அறிவாலயத்துக்கே பாதுகாப்பு அளிக்கும் சூழல் இருந்த... மேலும் பார்க்க

தன்னுடல் தாக்கு நோய்... தற்காக்கும் புதிய சிகிச்சை... தமிழக - ஜப்பான் ஆய்வில் உறுதி!

கரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும், பல லட்சக்கணக்கானோருக்கு இன்றளவும் அதன் எதிா்விளைவுகள் தொடா்கின்றன. கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் எனப்படும் புரதம், அளவுக்கு அதிகமாக சுரந்து தன்னுடல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி, முகூா்த்தம்: பூக்கள், பழங்கள் விலை உயா்வு

சென்னை: நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடா்ந்து முகூா்த்த தினமும் வருவதால், பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. முகூா்த்த நாள்கள் மற்ற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா?: உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை: போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போா் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டம் தேவையா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சியின்... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி

சென்னை: முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தியே அரசியலில் விஜயகாந்த் செயல்பட்டதாகவும், அவரது வழியிலேயே தேமுதிக செயல்பட்டு வருவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா தெரிவித்தாா். தேமுதிக நி... மேலும் பார்க்க