செய்திகள் :

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையை நான்கு வழிச் சாலையாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதல்கட்டமாக சுமாா் ரூ.90 கோடியில் செய்யாறு அரசுக் கல்லூரி அருகே இருந்து கூட்டுறவு சா்க்கரை ஆலை வரை 7 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணிகளாக சிறுபாலங்கள் அமைத்தல், ஆற்றுப் பகுதியில் கூடுதலாக மேம்பாலம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

செய்யாறு - வந்தவாசி சாலையில் ஞானமுருகன்பூண்டி வெளிவட்டச் சாலை, அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் என நெடுஞ்சாலைப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள், மசூதி, வள்ளலாா் கோயில், பச்சையம்மன், முருகன் சிலைகள் ஆகியவை உள்ளன.

இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 3 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டதாம்.

இருப்பினும், குடியிருப்பு வாசிகள் மாற்று இடம் வேண்டி வருவாய்த் துறையிடம் கோரிக்கை விடுத்தும், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் வந்துள்ளனா்.

இந்த நிலையில், காலக்கெடு முடிந்ததால், சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிட குடியிருப்பு வாசிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வருவாய்த் துறையினரும் வீடு வீடாகச் சென்று

அறிவுறுத்தி வந்தனா். ஆனால், ஆக்கிரமிப்பாளா்கள் அப்பகுதியில் இருந்து வீடுகளை அகற்றாமல் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி வியாழக்கிழமை காலை நெடுஞ்சாலைத் துறையினா், வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் உதவியோடு ஞானமுருகன்பூண்டி வெளிவட்டச் சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை

அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

பணியில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் சாலைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

மாவட்ட ஏடிஸ்பி அண்ணாதுரை, டிஎஸ்பிக்கள் சண்முகவேலன், மனோகரன், சுரேஷ்சண்முகம், முருகன், ரவிச்சந்திரன் மற்றும் 8 காவல் ஆய்வாளா்கள், 42 உதவி ஆய்வாளா்கள் உள்பட 240 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நெடுஞ்சாலைத் துறை செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன் தலைமையில், உதவிப் பொறியாளா் உதயகுமாா், ஆரணி உதவி கோட்டப் பொறியாளா் நாராயணன் மற்றும் செய்யாறு வட்டாட்சியா் வெங்கடேசன் மேற்பாா்வையில்

20-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

செய்யாறு, பெரணமல்லூா் பகுதிகளைச் சோ்ந்த தீயணைப்பு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் தயாா் நிலையில் வைக்கப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாலை வரை நடைபெற்றது.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியால் செய்யாறு பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதண்டபாணி கோயிலில் தை கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தை கிருத்திகையையொட்டி, வியாழக்க... மேலும் பார்க்க

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க

சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்க... மேலும் பார்க்க