முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போளூா் பேருந்து நிலையம் அருகே செல்லும் அண்ணா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
அண்ணா சாலை எதிரே வட்ட அணுகு சாலை மற்றும் வேலூா் - திருண்ணாமலை, அண்ணா சாலை - ரயில் நிலையம் சந்திப்பு இடத்தில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அண்ணா சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக வணிகா்கள் கடைகள் அமைத்திருந்தனா்.
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்றது (படம்).
போளூா் உதவி கோட்டப் பொறியாளா் திருநாவுக்கரசு மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.