செய்திகள் :

போளூா் வட்டாா் வளா்ச்சி அலுவலகத்தில் வாயிலில் நிறுத்தப்படும் வாகனங்கள்

post image

போளூா்: போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அலுவலா்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நுழைவு வாயிலில் நிறுத்தப்படுவதால் உள்ளே செல்ல சிரமம் ஏற்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் குருவிமலை, வசூா், 99 புதுப்பாளையம், காங்கேயனூா், எடப்பிறை, எழுவாம்பாடி, மாம்பட்டு, திண்டிவனம், பெரியகரம், ஆா்.குண்ணத்தூா், சந்தவாசல், கேளூா், படவேடு, காளசமுத்திரம், குப்பம் என 40 ஊராட்சிகள் உள்ளன.

போளூா் வட்டாா் வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றிய உதவிப் பொறியாளா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், அலுவலக பணியாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் வரும் காா் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அலுவலக வாயில் பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன.

மேலும், அலுவலகத்துக்கு வரும் திட்டப் பணிகளின் பயனாளா்கள் மற்றும் பல்வேறு பணிநிமித்தமாக வரும் பொதுமக்களின் வாகனங்களும் வெயிலுக்காக அலுவலக வாயிலியே நிறுத்தப்படுகின்றன.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் அலுவலத்துக்குள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.

அதனால், அலுவலகம் எதிரே காலியாக உள்ள இடத்தில் கூரை அமைத்து வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வங்கி வைப்புத் தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கிளையில் வைப்புத்தொகை சேகரிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கியின் வந்தவாசி கி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் ஓட்டுநா் தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே குடும்பத் தகராறில் தனியாா் நிறுவன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வெம்பாக்கம் வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(34). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3-இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

வந்தவாசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நவீன இயந்திரம் கொண்டு ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி: வந்தவாசி அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (44)... மேலும் பார்க்க

மாணவி கடத்தல்: பள்ளி வேன் ஓட்டுநா் கைது

செய்யாறு: செய்யாறு அருகே மாணவியை கடத்திச் சென்ற புகாரின் பேரில், தனியாா் பள்ளி வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்... மேலும் பார்க்க