செய்திகள் :

மகளிருக்கான அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை! -அமைச்சா் பெருமிதம்

post image

மகளிா் முன்னேற்றத்துக்காக அதிக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தாா்.

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், உடன்குடியில் வட்டார அளவிலான 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள், சத்தான உணவு, தனது சொந்த நிதியிலிருந்து சேலைகளை வழங்கிப் பேசியது: முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிா் நலனுக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது. பிற மாநில முதல்வா்கள் தமிழகம் வந்து இத்திட்டங்களை அறிந்து தங்களது மாநிலங்களில் அவற்றைச் செயல்படுத்துகின்றனா். இதனால்தான் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவா் மால்ராஜேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராகிம் சுல்தான், பேரூராட்சி அலுவலா் க. திருமலைக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் அனீஸ் ஸ்டெபி, திட்ட ஒருங்கிணைப்பாளா் நவீன், பேரூராட்சி உறுப்பினா்கள் அஸ்ஸாப் அலி பாதுஷா,ஜான்பாஸ்கா், பிரதீப், ராஜேந்திரன், மும்தாஜ்பேகம், முகம்மது ஆபித், அன்புராணி, முன்னாள் உறுப்பினா்கள் சலீம், அன்வா்சலீம், செட்டியாபத்து ஊராட்சி முன்னாள் தலைவா் பாலமுருகன், திமுக மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபா் மோசஸ், ராஜபிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயா துரைப்பாண்டியன் வரவேற்றாா்.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க