செய்திகள் :

மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து நடுவர்களுமே பெண்கள்..! ஐசிசி அதிரடி!

post image

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர்கள் அனைவருமே பெண்களாக நியமித்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா, இலங்கையில் செப்.30ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

மகளிர் உலகக் கோப்பையில் முதல்முறை...

மகளிர் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்து வரும் நிலையில் சமீபத்தில் அவர்களுக்கான பரிசுத் தொகையை ஐசிசி உயர்த்தியது.

இந்நிலையில், மகளிருக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நடுவர்களும் மகளிராக இருப்பார்களென அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் இருக்க வேண்டுமென இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நடுவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய வீராங்கனைகளான விருந்தா ரதி, என். ஜனனி, காய்த்ரி வேணுகோபாலன், ஜிஎஸ் லக்‌ஷ்மி ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலின சமத்துவம் எனும் மைல்கல்...

இது குறித்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறியதாவது:

நடுவர்கள் குழுவில் அனைவரையும் பெண்களாக பணியமர்த்தியது மிகப்பெரிய மைல்கல் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் என்பதின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பாக பார்க்கிறோம்.

இந்த வளர்ச்சி அடையாள மதிப்பைத் தாண்டியது. கண்ணால் காணத்தக்க, வருங்காலத்தில் பலரையும் உத்வேகம் கொள்ளதக்க வாய்ப்பாக அமையும் என்றார்.

இந்த உலகக் கோப்பையில் 8 அணிகள் மோதுகின்றன. நவ.2ஆம் தேதி இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன.

போட்டி நடுவர்கள்: ட்ரூடி ஆண்டர்சன், ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜிஎஸ் லட்சுமி, மிஷேல் பெரேரா.

நடுவர்கள்: லாரன் ஏஜென்பேக், கேன்டேஸ் லா போர்டே, கிம் காட்டன், சாரா தம்பனேவானா, ஷதீரா ஜாகிர் ஜெஸி, கெரின் கிளாஸ்டெ, என். ஜனனி, நிமாலி ஃபெரேரா, கிளாரி பொலோசக், விருந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், எலோயிஸ் ஷெரிடன், காயத்ரி வேணுகோபாலன், ஜாக்குலின் வில்லியஸ்.

Insisting that it was more than a symbolic gesture, the International Cricket Council (ICC) on Thursday announced an all-female officials line-up for the ODI World Cup which begins later this month in India and Sri Lanka.

அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் ... மேலும் பார்க்க

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் பிரச்னையில் தென்னாப்பிரிக்க அணி!

அடுத்தடுத்து வீரர்கள் காயமடைவதால் தென்னாப்பிரிக்க அணி புதிய பிரச்னையை சந்திக்க உள்ளது.நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 ஆம் ஆண்டுக்கான சுழற்சிக்கான போட... மேலும் பார்க்க

குல்தீப் யாதவ் பந்துவீச்சைக் கணிக்க முடியாது: முன்னாள் பாகிஸ்தான் வீரர்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார். ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் வாசிம் அக்ரம... மேலும் பார்க்க

தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்த ஷிவம் துபே!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷிவம் துபே தனது அபார பந்துவீச்சுக்கான ரகசியம் பகிர்ந்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நேற்று (செப்டம்பர் 10) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும்... மேலும் பார்க்க

காயம் காரணமாக ஆரோன் ஹார்டி விலகல்..! புதிய ஆல்-ரவுண்டர் சேர்ப்பு!

இந்தியா ’ஏ’க்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய ’ஏ’ அணியின் ஆல்ரவுண்டர் ஆரோன் ஆர்டி விலகியுள்ளார். தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆரோன் ஆர்டி விலகியுள்ளது ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது! உச்ச நீதிமன்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.ஆசியக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றில் இந்தியாவும் ப... மேலும் பார்க்க