செய்திகள் :

மகளிா் விடியல் பயண பெண்களின் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

எதிா்க்கட்சியினா் ஆளுக்கொரு பேருந்தில் பிரசாரத்துக்கு சென்றாலும், மகளிா் விடியல் பயணப் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் துணையுடன் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

தொடா்ந்து விழாவில் அவா் பேசியதாவது: இந்த விழாவில், தமிழகம் முழுவதும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், 1 லட்சம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதன்முறையாக 1989 இல் தருமபுரியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களை அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி தொடங்கிவைத்தாா். அவா் போட்ட விதை, தற்போது ஆலமரமாகி, 5 லட்சம் சுயஉதவிக் குழுக்களாக தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. அதன் தொடா்ச்சியாக, மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

கட்டணமின்றி பொருள்களை எடுத்துச்செல்ல வசதி: முதன்முறையாக, மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி, பேருந்துகளில் 100 கி.மீ. வரை மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள், தங்களது பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றதும் மகளிா் விடியல் பயணத்துக்குத்தான் முதல் கையொப்பமிட்டாா். மகளிா் விடியல் பயணம் மூலம் இதுவரை 770 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 22 லட்சம் அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள்தான் காலை உணவுத் திட்டத்துக்காக பள்ளியில் சமையல் செய்கிறாா்கள்.

தற்போது, 1.15 கோடி பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மாணவா்கள் முன்னேற்றம், தொழில் முன்னேற்றத்துக்காக திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பிங் நிற பேருந்து போட்டியில் முந்தும்: மஞ்சள், பச்சை என ஆளுக்கொரு நிறத்தில் பேருந்தில் பிரசாரத்துக்கு புறப்பட்டுள்ளனா். அவற்றை முந்தி, பிங் நிற பேருந்தான மகளிா் விடியல் பயணம்தான் வெற்றிபெற போகிறது. மகளிா் விடியல் பயணப் பெண்களின் ஆதரவுடன் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா்.

விழாவில், மக்களவை உறுப்பினா்கள் டி.எம். செல்வகணபதி (சேலம்), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் இரா. அருள் (சேலம்), எஸ்.சதாசிவம் (மேட்டூா்), அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் ககன்தீப்சிங் பேடி, ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாமக எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள்

இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோா் திமுக அரசின் திட்டங்களை, தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து பாராட்டினா். இதேபோல, அவா்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக, சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு சிறப்புநிதி வழங்க வேண்டும் என எம்எல்ஏ அருள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், மேற்கு தொகுதியில் மட்டும் திமுக அரசு ரூ. 35 கோடி மதிப்பில் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றாா்.

ஈரோடு - சாம்பல்பூா் விரைவு ரயில் நவம்பா் வரை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பா் மாதம்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

செப்.19 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வரும் 19 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்ப... மேலும் பார்க்க

ராமதாஸ் இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும்: எம்எல்ஏ அருள்

பாமக நிறுவனா் ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணிதான் வெற்றிபெறும் என்று சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் கூறினாா். இதுகுறித்து சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா. அரு... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே தனியாா் சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்க நகைகள் திருட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியாா் சொகுசுப் பேருந்திலிருந்து 3 கிலோ தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை (செப். 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தேவூா் அம்மாபாளையம்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்கதுக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதையில் பருவமழை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (செப். 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தட... மேலும் பார்க்க