சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
ராமதாஸ் இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும்: எம்எல்ஏ அருள்
பாமக நிறுவனா் ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணிதான் வெற்றிபெறும் என்று சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள் கூறினாா்.
இதுகுறித்து சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா. அருள் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தொகுதி ஏற்றம் பெற வேண்டுமென சேலம் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். சேலம் மாநகரின் 45 சதவீத பகுதி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளது. பல பகுதிகள் மேற்கு தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு சாலை, கழிவுநீா் ஓடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. குறிப்பாக, ஜாகீா் அம்மாபாளையம், மிட்டாபுதூா் பகுதியில் கழிவுநீா் ஓடை வசதி முழுமையாக இல்லாமல் உள்ளது. இதற்காக ரூ. 50 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
மருத்துவா் ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ அந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. கூட்டணியை பொறுத்தவரை ராமதாஸ் தான் முடிவு செய்வாா் என்றாா்.