செய்திகள் :

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

post image

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் (என்சிபி) மும்பை மண்டல அதிகாரிகள் கூறியதாவது:

நவிமும்பையில் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்த வாரம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்தக கும்பலானது, அமெரிக்காவில் இருந்து கூரியா் சேவை அல்லது மனிதா்கள் மூலம் போதைப் பொருளை கடத்திவந்து, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விநியோகித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையில் 11.54 கிலோ எடையுள்ள விலை உயா்ந்த கோகைன் போதைப் பொருள், 5.5 கிலோ எடையுள்ள கஞ்சா ஜெல்லிகள், கஞ்சா விதைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.200 கோடியாகும். ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்த கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 நால்வருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி பெறத் தேவையான பெரும்பான்மை இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: 18 தொகுதிகளில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் பாஜக 18 இடங்களிலும் ஆம் ஆத்மி 13 இடங்களிலும் முன்னிலைய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். 70 தொகுத... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க