செய்திகள் :

மகாராஷ்டிரா: `மகனுக்குத் துணை முதல்வர் பதவியா?' - பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஷிண்டே!

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளபோதிலும், ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. புதிய அரசில் யார் முதல்வர் என்பதிலும், அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதிலும் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. முதல்வர் பதவி மட்டும் பா.ஜ.கவிற்கு என்று முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் அமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதில் சிவசேனா மற்றும் பா.ஜ.க இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசரமாக ஏக்நாத் ஷிண்டே சதாராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

பட்னாவிஸ்

நேற்று முன் தினம் பா.ஜ.க தன்னிச்சையாக வரும் 5ம் தேதி அமைச்சரவை பதவியேற்கும் என்று அறிவித்தது. இதையடுத்து நேற்று அவசர அவசரமாக ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊரில் இருந்து மும்பை திரும்பினார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''முதல்வர் விவகாரத்தில் பா.ஜ.க தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் சிவசேனா ஆதரவு கொடுக்கும்'' என்றார். சிவசேனாவிற்கு உள்துறை அமைச்சர் பதவி கேட்கப்படுவதாகவும், மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேயிக்கு துணை முதல்வர் பதவி கேட்கப்படுவதாகவும் செய்தி வெளியாகி இருப்பது குறித்து கேட்டதற்கு, அதனை மறுக்காத ஏக்நாத் ஷிண்டே, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றும், அதிகார பகிர்வில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும், பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அதிகார பகிர்வு தொடர்பாக முதல் கூட்டம் டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் நடந்துள்ளது. இரண்டாவது கூட்டம் மும்பையில் நடைபெறும். மகாராஷ்டிரா நலனை கருத்தில் கொண்டு அதில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஓரிரு நாளில் கூடி தேர்வு செய்வார்கள் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

பா.ஜ.க மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே இது குறித்து அளித்த பேட்டியில், ''பா.ஜ.க தலைமை முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்தவுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை தேர்வு செய்வார்கள்'' என்றார். அதிகார பகிர்வில் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்து சிவசேனா எம்.எல்.ஏ.குலாப்ராவ் அளித்த பேட்டியில், ''தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மஹாயுதி கூட்டணியில் சேராமல் இருந்திருந்தால் சிவசேனாவில் இருந்து 90 முதல் 100 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்தபோது எங்களிடம் கேட்கவில்லை'' என்றார். ஏக்நாத் ஷிண்டே உள்துறை அமைச்சகத்துடன், மகனுக்கும் துணை முதல்வர் பதவி கேட்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதேசமயம் மும்பை ஆசாத் மைதானத்தில் அமைச்சரவை பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதை பிரதமர் அலுவலகம் உறுதி செய்து இருக்கிறது. நாக்பூரில் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக சித்தரித்து ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க தலைமை இவ்விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக அஜித் பவார் முதல் ஆளாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இப்பதவிக்கு பா.ஜ.கவில் தேவேந்திர பட்னாவிஸ் பெயர்தான் முன்னிலையில் இருக்கிறது என்று பா.ஜ.க தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

`சமுதாயம் நிலைக்க குடும்பத்துக்கு 3 குழந்தைகள் அவசியம்' - மோகன் பகவத் வலியுறுத்தல்!

``நாட்டில் மக்கள்தொகை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் சிறுபான்மை சமுதாய மக்கள் தொகை அதிகரித்து வருகிறது" என இந்து அமைப்புகள் கூறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நாக்பூரில் நிகழ்ச... மேலும் பார்க்க

ரூ.5,900 கோடி மதிப்பிலான Bitcoin; ஹார்ட் டிரைவை குப்பையில் வீசிய முன்னாள் காதலி; போராடும் இளைஞர்!

இங்கிலாந்தின் நியூபோர்ட் (Newport) நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி இவான்ஸ்(Halfina Eddy-Evans). இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ் (James Howells). ஹோவல்ஸ் கடந்த 2009 ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: ஃபெஞ்சல் புயல் `டு' IPL மெகா ஏலம்; இந்த வார கேள்விகள்... ஆட்டத்துக்கு ரெடியா?!

ஃபெஞ்சல் புயல், ஐ.பி.எல் மெகா ஏலம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா:`பைக்கில் மோதாமலிருக்க முயன்று விபத்து' - அரசு பஸ் கவிழ்ந்து 11 பயணிகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் இன்று அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. அரசு பஸ் நாக்பூரில் இருந்து கோண்டியாவிற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.பஸ்சில் 35 பயணிகள் இர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `55% வாக்குப்பதிவு 67%-ஆக அதிகரித்தது எப்படி?'- சந்தேகம் கிளப்பும் மாஜி தேர்தல் கமிஷனர்

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ள அமோக வெற்றி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இத்தேர்தல் முடிவுகளில் சந்தேகம் கிளப்பி இருக்கின்றன. இதனை நி... மேலும் பார்க்க