மகாராஷ்டிர ரயில் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய மகாராஷ்டிர முதல்வர்
மகாராஷ்டிரத்தில் புஷ்பக் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் இரங்கல் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தெரிவித்ததாவது, ``ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா அருகே ரயில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட சோகமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. அமைச்சர் கிரிஷ் மகாஜன், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணியில் முழு மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது.
மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக பொது மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன’’ என்று கூறினார்.
இதையும் படிக்க:மணிப்பூரில் பாஜக ஆதரவு தொடரும்! ஐக்கிய ஜனதா தளம்
லக்னௌ ரயில் நிலையத்திலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது, இன்று மாலை 4 மணியளவில் பராண்டா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பொறி பற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அச்சமடைந்த பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, கீழிறங்கி ஓடினர்.
இந்த நிலையில், ரயில் பாதையில் ஓடிய பயணிகள் மீது அவ்வழியாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.