மகாவீா் ஜெயந்தி: இறைச்சிக் கூடங்கள் மூடல்
சென்னை: மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் பெரம்பூா், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப். 10) நாடு முழுவதும் மகாவீா் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். இதற்கு இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுபானக் கடைகளும் மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு இயங்காது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.