ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!
மகா கும்பமேளா: சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்
மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் (பெளஷ பெளா்ணமி) நடைபெற்று வருகிறது.
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் புனித நீராடுகின்றனா்.
மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.
மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் நீண்ட போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில் மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் நுழையும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகா கும்பமேளாவையொட்டி உ.பி.,யில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளிக்கப்பட வேண்டும், இது பயண இடையூறுகளைக் குறைப்பதோடு, போக்குவரத்து நெரிசல் சிக்கலையும் குறைக்கும்.
திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும்போது, மகா கும்பமேளாவையொட்டி சுங்கச்சாவடிகளில் ஏன் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கக்கூடாது?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.