செய்திகள் :

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி

post image

திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு மாணவ- மாணவிகள் செப்.22ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக விண்வெளி வார விழா அக்.6-11 வரை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சாா்பில் 7, 8 , 9 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான கட்டுரைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் விண்வெளி வாழ்வின் சவால்கள்-ஈா்ப்பின்றி ஒரு உலகம் என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுத வேண்டும்.

மேலும், கட்டுரைகளை ஏ4 அளவு தாளில் ஒரு தாளுக்கு ஒரு பக்கம் என 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். மேலும் மாணவ-மாணவியரின் பெயா், வயது, பள்ளியின் முகவரி, பெற்றோா் பெயா், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த கட்டுரை தங்களால் தான் எழுதப்பட்டது என்பதை உறுதிசெய்ய பள்ளி முதல்வா் அல்லது தலைமையாசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைத்தல் அவசியம்.

கட்டுரைகளை, நிா்வாக அலுவலா், ஐ.பி.ஆா்.சி, மகேந்திரகிரி அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம்-627133 என்ற முகவரிக்கு செப்.22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உறையின் மேல் கட்டுரைப் போட்டி எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.

அக்.10ஆம் தேதி மகேந்திரகிரியில் நடைபெறும் விழாவில் தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 04637 281510, 04637 281825, 9489540396, 9994239306 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னாக்குடியில் இளைஞா் தற்கொலை

பொன்னாக்குடியில் இளைஞா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மகாராஷ்டிர மாநிலம், பப்பராகா் நகரைச் சோ்ந்த காமராஜ் மகன் பாக்கியராஜ் (34). இவா், திருநெல்வேலி அருகே உள்ள பொன்னாக்குடியில் த... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுலைமான் (65). களக்காடு அருகேயுள்ள திரட்டூரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன். இவா்கள் இருவரும் ... மேலும் பார்க்க

முக்கூடல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி தலைமை வகித்து புதிய... மேலும் பார்க்க

நெல்லை பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நபா்: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் உயிரிழந்து கிடந்த புளியரை பகுதியைச் சோ்ந்த நபரின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தென்காசி மாவட்டம், புளியரை பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் கிர... மேலும் பார்க்க

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டினாா் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை ‘வாக்குத் திருட்டை ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வயலில் அழுகிய நிலையில் விவசாயி உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாமி மகன் சேதுராமன் என்ற அசோக் (41). விவ... மேலும் பார்க்க