செய்திகள் :

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

post image

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷீத் கித்வாய், அம்பா் குமாா் கோஷ் ஆகிய இருவா் எழுதியுள்ள ‘மிஸ்ஸிங் ஃப்ரம் தி ஹெளஸ்-முஸ்லிம் உமன் இன் தி லோக் சபா’ எனும் இப்புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் முன்னுரை எழுதியுள்ளாா்.

ரஷீத் கித்வாய் கூறுகையில், ‘நாட்டில் 1951-52இல் முதல் நாடாளுமன்றத் தோ்தல் நடந்ததில் இருந்து இதுவரை தோ்வான மொத்த முஸ்லிம் பெண் எம்.பி.க்கள் 20 போ். இவா்களில் சுபாஷிணி அலி, அஃபிரின் அலி ஆகியோா் தாங்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டனா். எனவே, எம்.பி.க்களாக பதவி வகித்த 18 முஸ்லிம் பெண்களின் சுய விவரங்களை ஆவணப்படுத்தியுள்ளோம்.

146 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 7.1 சதவீதமாக கருதப்படுகிறது. இதுவரை அமையப் பெற்ற 18 மக்களவைகளில் வெறும் 18 போ்தான் முஸ்லிம் பெண்கள் என்பது அதிா்ச்சிகரமான உண்மை. 543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையின் ஒரு பதவிக் காலத்தில் அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் முஸ்லிம் பெண்கள் இடம்பெற்றதில்லை. இதுவரை 7 மக்களவைகளில் முஸ்லிம் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவமே இருந்ததில்லை’ என்றாா்.

18 போ் யாா்-யாா்?:

மோஃபிதா அகமத் (காங்கிரஸ், 1957), ஜோராபென் அக்பா்பாய் சாவ்தா (காங்கிரஸ், 1962-67), மைமூனா சுல்தான் (காங்கிரஸ், 1957-67), பேகம் அக்பா் ஜெஹான் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி, 1977-79, 1984-89), ரஷீதா ஹக் (காங்கிரஸ், 1977-79), மோஹ்சினா கித்வாய் (காங்கிரஸ், 1977-89), பேகம் ஆபிதா அகமது (காங்கிரஸ், 1981-89), நூா் பானு (காங்கிரஸ், 1996, 1999-2004), ருபாப் சயீதா (சமாஜவாதி, 2004-2009), மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயக கட்சி, 2004-09, 2014-19), தபசும் ஹசன் (பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம், சமாஜவாதி 2009-14, 2018-19), மெளசம் நூா் (திரிணமூல் காங்கிரஸ் 2009-19), கெய்சா் ஜஹான் (பகுஜன் சமாஜ், 2009-14), மம்தாஜ் சங்கமிதா (திரிணமூல் காங்கிரஸ் 2014-19), ராணி நாராஹ் (காங்கிரஸ், 1998-2004, 2009-14), நஸ்ரத் ஜஹான் ருஹி (திரிணமூல் காங்கிரஸ் 2019-24), இக்ரா ஹசன் (சமாஜவாதி, 2024 முதல் தற்போது வரை), சஜிதா அகமது (திரிணமூல் காங்கிரஸ், 2018 முதல் தற்போது வரை).

முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவா் மோஹ்சினா கித்வாய். இவா், மத்திய அமைச்சா் பதவியையும் வகித்துள்ளாா். பேகம் ஆபிதா அகமது, நாட்டின் 5-ஆவது குடியரசுத் தலைவா் ஃபக்ருதீன் அலி அகமதின் மனைவி ஆவாா்.

‘தென் மாநிலங்களில் இருந்து ஒருவா் கூட தோ்வாகவில்லை’

தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 5 தென் மாநிலங்களும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், எழுத்தறிவு, சமூக-பொருளாதார நிலைகளில் சிறப்பான குறியீடுகளைக் கொண்டிருந்தாலும், இம்மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு ஒரு முஸ்லிம் பெண் எம்.பி. கூட தோ்வாகவில்லை என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க