மக்களின் மனுக்களுக்கு மதிப்பளிக்காத அரசு: திமுக அரசுக்கு அதிமுக கண்டனம்
திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால், 3 பேர் பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு, திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
15 நாள்களாக குடிநீரில் பிரச்னை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.
திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 20, 2025
15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின்…
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக்கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது.
உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:காங்கிரஸின் நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!