செய்திகள் :

மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

post image

திட்டங்களை அறிவித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 18) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,

''யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ? அவர்களுக்கு பதவி தருகிறார் மு.க. ஸ்டாலின். திமுகவில் யார் அதிகம் கப்பம் கட்டுகிறார்களோ அவர்களுக்கே பாராட்டு கிடைக்கும்.

திமுகவில் பல போராட்டங்களில் ஈடுபட்டு கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, சமூக நலத் துறை என பல துறைகளில் அதிமுக அரசு விருதுகளைப் பெற்றது.

இன்று, தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை எனப் புகார்கள் வருகின்றன.

கிராமம் முதல் நகரம் வரை நடமாடும் மருத்துவமனைகளை அமைத்தது அதிமுக அரசு.

தமிழகத்தின் கிராமங்களில் 2 ஆயிரம் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டது. இதனை திமுக அரசு ரத்து செய்துவிட்டது.

திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள், அடுத்த ஆண்டு ஆட்சி அமைத்து மீண்டும் தொடங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கடன்கள் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டன.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதற்காக 7.5% இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது அதிமுக.

மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக உள்ளது'' எனப் பேசினார்.

இதையும் படிக்க | ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

AIadmk edappadi palanisamy in kalasapakkam campaign

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது!

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு ஆந்திரம், தெற்கு ... மேலும் பார்க்க

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்த... மேலும் பார்க்க

ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

அதிமுக பலவீனமாகத்தான் இருக்கிறது என்றும் அதனைச் சரிசெய்யவே தான் இருப்பதாகவும் வி.கே. சசிகலா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவதுத... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (06061) ஆகஸ்ட் 27, செப்டம்பர் ... மேலும் பார்க்க

தவெக கொடிக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்!

தவெக கொடியை பயன்படுத்தத் தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியைப்போல தவெகவின் கொடி இருப்பதாகக் கூறி, தவெகவின் கொடி மீது தடைவிதிக்கக் க... மேலும் பார்க்க

2 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (17-08-2025) காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டிய ... மேலும் பார்க்க