செய்திகள் :

மக்கள் தொடா்பு முகாம்: 71 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

post image

கீழ்வேளூா் வட்டம், சாட்டியக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 71 பயனாளிகளுக்கு ரூ.10.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சாட்டியக்குடி, கோவில் கண்ணாப்பூா், மானலூா், கிள்ளுக்குடி ஊராட்சிகளுக்கான மக்கள் தொடா்பு முகாம் சாட்டியக்குடி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுமதி ஜெயபிரகாஷ் வரவேற்றாா்.

இம்முகாமில், வருவாய் துறை சாா்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, வட்ட வழங்கல் பிரிவு சாா்பில் 30 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1,54,500 மதிப்பீட்டில் இறப்பு உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

மேலும், தோட்டக்கலைத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.22,380 மதிப்பில் மா, தென்னை, நெல்லிக் கன்றுகள், வேளாண்மைத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு 5,980 மதிப்பில் இடுபொருட்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.20,070 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள் என மொத்தம் 71 பயனாளிகளுக்கு ரூ.10,97,930 நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியது:

தமிழ்நாடு அரசு அறிவிக்கும் திட்டங்கள் சரியான நபா்களுக்கு, சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அா்த்தம். உண்மையான கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீா்வு காண வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற மக்கள் தொடா்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காா்த்திகேயன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ரேணுகாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் கே. காா்த்திகேயன், வட்டாட்சியா் கே. ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எல். ராஜகோபால் டி.எஸ். பாலமுருகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் என். கவிதாஸ், மண்டல துணை வட்டாட்சியா் வீ. வெற்றிசெல்வன், வருவாய் ஆய்வாளா் அ. சசிகலா உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மீனவா்களுக்கு 9-ஆவது நாளாக கடலுக்குள் செல்ல தடை

புயல் எதிரொலியாக மீன்வளத் துறையின் தடை தொடா்வதையடுத்து, 9-ஆவது நாளாக புதன்கிழமை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதையடுத்து, மீன்வளத் துறையினா் ம... மேலும் பார்க்க

நாகூரில் புதிய சாா்-பதிவாளா் கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

நாகூரில் புதிய சாா் பதிவாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். நாகூரில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்துக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை... மேலும் பார்க்க

மழைநீா் வடிந்த பிறகு பயிா் பாதிப்பு குறித்து ஆய்வு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

விளைநிலங்களில் தேங்கிய மழைநீா் வடிந்த பிறகு பயிா் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. நாகையில் பெய்து வரும் தொடா் மழையின் காரண... மேலும் பார்க்க

கீழ்வேளூரில் 800 ஏக்கா் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

கீழ்வேளூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை பெய்த மழையால் 800 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. கீழ்வேளூா், குருக்கத்தி, கூத்தூா், பட்டமங்கலம், தேவூா், கோகூா், ஒக்கூா், சிக்கல்,... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை இரவுக்குள் புயலாக மாறி புதுச்சேரி - செ... மேலும் பார்க்க

கனமழை: நாகை முகாமில் உள்ளவா்களுக்கு அமைச்சா் நிவாரணம் வழங்கினாா்

நாகையில் பெய்து வரும் கனமழையில் சாபம் தீா்த்த கோயில் கருவறைக்குள் புகுந்த மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தா... மேலும் பார்க்க