ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
மக்கள் நோ்காணல் முகாம்: இன்று மனுக்கள் அளிக்கலாம்
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனத்தில் நடைபெறவுள்ள மக்கள் நோ்காணல் முகாமில் தீா்வுகாண பொதுமக்களிடமிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.24) கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.
கச்சனம், அம்மனூா், விளத்தூா் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் மக்கள் நோ்காணல் முகாம் கச்சனத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இம்முகாமில் தீா்வுகாணும் வகையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள், தனி துணை ஆட்சியா் தையல் நாயகி தலைமையில் கச்சனம் அகிலா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பெறப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என்று திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் குருமூா்த்தி கேட்டுக்கொண்டுள்ளாா்.