செய்திகள் :

மக்கள் பணத்தை கோடீஸ்வர நண்பர்களுக்கு கடனாக வழங்குவது, தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா?

post image

புது தில்லி: பாஜக தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு மக்களின் பணத்தை கடனாக வழங்குவதும்,பின்னர் அந்தக் கடன்களை 2-3 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா? என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் தேசியத் தலைநகருக்கு மட்டுமல்லாமல், முழு நாட்டிற்கும் ஒரு போட்டியாகும். இந்தத் தோ்தல் இரண்டு மாறுபட்ட சித்தாந்தங்களை கொண்டுள்ளது. ஒன்று பொதுமக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது. மற்றொன்று தோ்ந்தெடுக்கப்பட்ட பணக்கார தனிநபா்களின் குழுவிற்கு பயனளிப்பதில் கவனம் செலுத்துகிறது என ஒன்றுக்கொன்று எதிராக நிற்கிறது.

இந்தத் தோ்தல் வரி செலுத்துவோரின் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தீா்மானிப்பது பற்றியது. பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சித்தாந்தம், தனது நெருங்கிய கோடீஸ்வர நண்பர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய பொது நிதியைப் பயன்படுத்துகிறது. மற்றொன்று, எங்கள் ஆம் ஆத்மி கட்சி சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 24 மணி நேர மின்சாரம் மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு 400-500 தொழிலதிபா்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக மாதிரி மக்களின் பணத்தை அதன் நண்பா்களுக்கு கடனாக வழங்கி, பின்னா் அந்தக் கடன்களை 2-3 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்கிறது. இதற்கு நோ்மாறாக, ஆம் ஆத்மி மாதிரி பொதுமக்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகிறது. இதில் தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ரூ.25,000 மதிப்புள்ள நலத்திட்டங்கள் அடங்கும்.

பாஜக தில்லியில் ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி கட்சியால் தொடங்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் தில்லி அரசால் வழங்கப்படும் பிற சலுகைகளை நிறுத்துவதாக பாஜக ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் பாஜக தனது கோடீஸ்வர நண்பா்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினாா் கேஜரிவால்.

வீணாக வெளியேறும் நீா்: பூண்டி ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீா் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா். சென்னைக்கு குடிநீா் வழங்கு... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கூடாது: அண்ணாமலை

சென்னை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் காலை உணவுத் திட... மேலும் பார்க்க

மெட்ராஸ்காரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மெட்ராஸ்காரன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.எஸ்ஆர் புரொடக்‌ஷன் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை முன்பு திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் இன்று(ஜன. 28) மீண்டும் ஆஜராகியுள்ளார். திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

தனுஷுக்கு எதிரான நெட்ஃபிளிக்ஸின் மனு தள்ளுபடி!

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக, தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இயக்குநா் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தார... மேலும் பார்க்க

விழுப்புரத்துக்கு 11 புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர்!

விழுப்புரம் மாவட்டத்துக்கு 11 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து முதல்வா்... மேலும் பார்க்க