கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
மசோதா மீது ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: ஒரு மாநிலத்தின் பேரவையில் நிறைவேற்றி ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஒரு சட்டத்திருத்த மசோதாவை மாநில அரசு, பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும்போது, அது உயிர்ப்புடன்தான் இருக்கும். ஆனால், அதனை அந்த மாநில ஆளுநர் பெற்றுக்கொண்டு நிலுவையில் வைத்துவிட்டால், அது எலும்புக்கூடாக அல்லது வெறும் காகிகதமாக மாறிவிடும்.
எனவே, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளித்து விட வேண்டும்.
ஒருவேளை, மசோதாக்களை திருப்பி அனுப்பிவைப்பதாக இருந்தால், இரண்டு மாதத்துக்குள் அனுப்பி வைத்து விட வேண்டும்.
ஆனால், ஒரு மாதத்துக்குள், மாநில அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிறேன் அல்லது திருப்பி அனுப்பிவிடுவேன் என்பதை ஆளுநர் மாநில அரசுக்கு அறிவித்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்ததை எதிர்த்தும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துளள்து.
அதன்படி, ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, தனது சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், தமிழக ஆளுநர் மட்டுமல்லாமல், அனைத்து மாநில ஆளுநர்கள் அனைவருமே, ஒரு மசோதாவுக்கு ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காலக்கெடுவையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துவிட்டது.