செய்திகள் :

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரங்கள் அவகாசம்

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கின் விசாரணையை நிறைவு செய்து, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் சட்டவிரோதக் காவலில் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலையில் தொடா்புடைய காவல் துறை உயா் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்தக் கொலை விவகாரம் தொடா்பாக அஜித்குமாா் குடும்பத்தினரிடம் பேரம் பேசிய அரசியல் பிரமுகா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் மாரீஸ் குமாா், காா்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முதல் தகவல் அறிக்கை, முதல் நிலை விசாரணை அறிக்கை நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிஐ தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. எனவே, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வருகிற 6 வாரங்களுக்குள் சிபிஐ விசாரணையை நிறைவு செய்து, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பட்டாசு விற்பனை உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்துக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 26) இறுதி நாள் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

தமிழறிஞா் சிலையை அகற்ற தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தமிழறிஞா் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்ற தடை கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை விரகனூரைச் சோ்... மேலும் பார்க்க

குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

மதுரை அய்யா்பங்களா பகுதியில் நடைபெற்று வரும் குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநக... மேலும் பார்க்க

அக். 2-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை ஐராவதநல்லூா் கணேஷ்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த துரைபாண்டி மகன் நவீன்குமாா் (34). கடந்த 21-ஆம் த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள்: வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு

நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வித் துறை அலுவலகங்களை நவ.12-ஆம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவ... மேலும் பார்க்க