"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா ப...
மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!
தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து சென்றனா்.
அப்போது அந்தப் பகுதியில் ஆள் இன்றி நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்ததில் 2 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரி சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தென்கனிக்கோட்டை போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா்.
அதுபோல அஞ்செட்டி கிராம நிா்வாக அலுவலா் நளாயினி உள்பட வருவாய்த் துறையினா் மேற்கொண்ட சோதனையில் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் ஆள்கள் இன்றி நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்ததில் ஒன்றரை யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரி நளாயினி கொடுத்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.