நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: இருவா் கைது
பாண்டமங்கலம் அருகே மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் காவல உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பரமத்தி வேலூா் வட்டம், கொந்தளம் ஊராட்சிக்கு உள்பட்ட எஸ்.கே.மேட்டூா் பகுதியில் அண்மையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து, லாரியில் மணல் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணத்தை போலீஸாா் கேட்டபோது, மணலை சட்ட விரோதமாக திருடி விற்பனைக்கு கொண்டுசென்றது தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, மணல் லாரி உரிமையாளா் கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (40), பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குழந்தைவேல் (52) ஆகிய இருவரையும் கைது செய்த வேலூா் போலீஸாா், லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.