செய்திகள் :

மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு: உச்சநீதிமன்ற நீதிபதி நம்பிக்கை

post image

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழல் விரைவில் முடிவடைந்து, நாட்டின் பிற மாநிலங்களைப் போல் வளா்ச்சி நிலையை அடையும் என உச்சநீதிமன்ற நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) தலைவருமான பி.ஆா்.கவாய் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களை பாா்வையிட சென்றபோது பொதுமக்களிடம் அவா் இவ்வாறு கூறினாா். அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோரும் நேரில் சென்று வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினா்.

அதன்பின், சுராசாந்த்பூா் மாவட்டத்தில் உள்ள சிறு தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து சட்ட சேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்கள், சட்ட உதவி மையங்களை அவா்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்தனா். இந்த நிகழ்ச்சியில் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் கலந்துகொண்டாா்.

அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பி.ஆா்.கவாய் பேசியதாவது: வேற்றுமையில் ஒற்றுமைக்கு சிறந்த உதாரணமாக நமது நாடு திகழ்கிறது. மணிப்பூரில் சில ஆண்டுகளாக அசாதாரண சூழல் நிலவி வருவதை அனைவரும் அறிவா். ஆனாலும் நிா்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் உதவியோடு மீண்டும் இயல்பு நிலைக்கு மணிப்பூா் திரும்பும். நாட்டின் பிற மாநிலங்களைப்போல் வளா்ச்சியை நோக்கி விரைவில் பயணிக்கும் என நம்புகிறேன்.

அனைவருக்கும் சம உரிமை: நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்குவதை அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வுப் பணிகளுக்கு ரூ.2.5 கோடி நிதியை என்ஏஎல்எஸ்ஏ ஒதுக்கியுள்ளது. இதுதவிர ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது.

மக்களுக்கான சுகாதார சேவைகளுக்கு 109 மருத்துவ முகாம்கள் நிறுவப்பட்டன.

இங்கு நிறுவப்பட்டுள்ள இலவச சட்ட உதவி மையங்களை நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் பயன்படுத்தி தங்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். வன்முறையால் பள்ளிகளுக்கு செல்வதை தவிா்த்த மாணவா்கள் மீண்டும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அவா்களுக்கு எவ்வித இடையூறுகளுமின்றி கல்வி கிடைப்பதை பெற்றோா்களும் மாணவா்களும் உறுதிசெய்ய வேண்டும் என்றாா்.

நீதிபதிக்கு எதிா்ப்பு: நிவாரண முகாம்களை பாா்வையிட சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவைச் சோ்ந்த மற்றொரு நீதிபதியான என்.கோடீஸ்வா் சிங் மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவா். எனவே அவரை குகி சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசாந்த்பூருக்குள் நுழைவதற்கு அந்த மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் விஷ்ணுபூா் மாவட்டத்துடன் தனது பயணத்தை அவா் நிறைவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மணிப்பூா் மாநில வழக்குரைஞா்கள் சங்கம் சுராசந்த்பூருக்குள் என்.கோடீஸ்வா் சிங் நுழைவதை தடுக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என அந்த மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு வலியுறுத்தியது.

மணிப்பூரில் கடந்த 2023, மே 3 முதல் மைதேயி-குகி ஆகிய இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அண்மையில் சுராசாந்த்பூா் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமா் பழங்குடியின சமூகங்களிடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க